எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் 2-வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது.
நீண்ட கடற்கரையை பாதுகாக்க தமிழ்நாடு நெய்தல் மீட்பு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் காலநிலை மாற்றம் தொடர்பாக தமிழகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப நம்மை தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கையை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை 8.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. கடல் அரிப்பை தடுக்க அலையாத்தி காடுகள் உருவாக்கப்படுகின்றன.
ரூ.500 கோடியில் ஊரகப் பகுதியில் 5,000 நீர்பாசனங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் மஞ்சப்பை திட்டத்தால் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியின் பயன்பாடு கணிசமாக குறைந்துள்ளது.
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழகம் இந்தியாவிலேயே 3-வது இடத்தில் உள்ளது. நீரேற்று நிலையங்களை மேம்படுத்த திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.
இயற்கை வளத்தை பாதிக்காத வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வெள்ள அபாயங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


