எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரியலூர், கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என முதல்வர் ஸ்டாலின் பத்திரிகை மற்றும் ஊடகத்தின் வாயிலாக செய்திகளை பரப்பி வருகிறார். இது கண்டனத்துக்குரியது என அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினர்.
அ.தி.மு.க. கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான, தாமரை எஸ்.ராஜேந்திரனின் மகள் பார்கவியின் திருமணம் நேற்று (டிச.6) அரியலூரில் நடைபெற்றது. முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக முதல்வர் ஸ்டாலின் 2024 மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றி பெற்றோம் என்று கூறி வருகிறார். ஆனால், அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க.வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று 100 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளது. அரியலூர் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது.
கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்திரிகை மற்றும் ஊடகத்தின் வாயிலாக செய்திகளை பரப்பி வருகிறார். இது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் அ.தி.மு.க.ஆட்சியின்போது அரியலூருக்கு மருத்துவக் கல்லூரி உட்பட 14 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையம், அனைத்து பகுதிகளிலும் மேம்பாலங்கள், சாலைகள் என பல்வேறு நலத்திட்டங்களை எனது தலைமையிலான ஆட்சியில் செயல்படுத்தி உள்ளேன்.
விவசாயிகள் நலனில் அக்கறையோடு அ.தி.மு.க.ஆட்சி செயல்பட்டது. விவசாயிகளை மீட்டெடுத்த ஒரே இயக்கம் அ.தி.மு.க.மட்டும் தான். காவேரி வேளாண் பாதுகாப்பு மண்டலம் அறிவித்து விவசாயிகளை எப்போதும் அரவணைத்துக் கொள்ளும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டும் தான். ஆனால் இதையெல்லாம் ஸ்டாலின் மறந்து பேசி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


