எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அடிலெய்டு : அடிலெய்டு டெஸ்ட்டில் தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு இந்திய அணி சரிந்தது. 60.71 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
சுற்றுப்பயணம்...
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது.இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
2-வது இன்னிங்சை...
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 87.3 ஓவர்களில் 337 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா முகமது சிராஜ் தலா 4 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 24 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 128 ரன்கள் அடித்திருந்தது.
175 ரன்களில் அவுட்...
இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரிஷப் பண்டின் விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 2-வது இன்னிங்சில் 175 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா வெற்றி பெற வெறும் 19 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.இந்தியா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
ஆஸி. முதலிடத்தில்...
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3.2 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இந்த வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது . 60.71 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 59.26 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2வது இடத்தில உள்ளது. 57.29 புள்ளிகளுடன் இந்திய அணி 3வது இடத்தில உள்ளது
சிறப்பாக விளையாடவில்லை: ரோகித்
போட்டி முடிந்ததும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், "இது எங்களுக்கு ஏமாற்றமான வாரம். நாங்கள் ஆட்டத்தை வெல்லும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக விளையாடியது. இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற வாய்ப்புகள் இருந்தன. ஆனால் நாங்கள் அதைச் செய்யத் தவறிவிட்டோம். அது எங்களுக்கு பின்னடைவாக அமைந்தது.இளஞ்சிவப்பு பந்து சவாலாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக விளையாடியது. தற்போது நாங்கள் அடுத்த போட்டியை எதிர் நோக்கியுள்ளோம் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


