Idhayam Matrimony

தமிழ்நாட்டில் 2024-ம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழை 33 சதவீதம் கூடுதல் பொழிவு : இந்திய வானிலை ஆய்வு மைய தகவல்

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      தமிழகம்
India-Meteorological 2022

Source: provided

சென்னை : பொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் வடகிழக்குப் பருவமழை 2024-ம் ஆண்டில் இயல்பை விட 33 சதவிகிதம் கூடுதலாக பதிவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், "தமிழகத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது. இதன்படி நடப்பு ஆண்டில் இயல்பை விட 33 சதவீதம் அளவுக்கு வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு காலத்தில் பருவமழை 590 மி.மீ. மழை பெய்துள்ளது. தமிழகத்தில் பெஞ்சல் புயலை ஒட்டி டிசம்பர் 11-ம் தேதிமுதல் 14-ம் தேதி வரை அதிகனமழை பெய்துள்ளது. நெல்லை, சேலம், தருமபுரி, திருபத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிக மழை பதிவானது.

2024-ல் 4 புயல்கள் ஏற்பட்டன. கடந்த ஆண்டைவிட இம்முறை 143 மி.மீ. மழை அதிகம். 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1,179 மி.மீ. மழை பதிவானது. வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை. பொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு வட கிழக்கு பருவமழை விலகும்" என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து