Idhayam Matrimony

தமிழகத்தில் கழிவுகளை கொட்டிய விவகாரம்: மருத்துவமனை மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2025      தமிழகம்
National-green-tribunal-202

சென்னை, தமிழகத்தில் கழிவுகளை கொட்டிய மருத்துவமனை மீது 7 நாட்களாகியும் இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டியது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. நேற்று இது தொடர்பாக விசாரணை நடத்தியது. அப்போது 390 டன் மருத்துவ கழிவுகளை 30 டிரக்குகள் கொண்டு அகற்றியுள்ளதாக கேரள அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கேரள வழக்கறிஞரிடம் "7 நாட்களான நிலையில் ஏன் இன்னும் முறையான அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பினர். மேலும், "மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காவிடில் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதை நிறுத்த வேண்டும்" கேரள அரசுக்கு எச்சரிக்கு விடுத்தனர்.

மருத்துவ கழிவு கொட்டியது தொடர்பாக எல்லை மாவட்டங்களில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கை ஜனவரி 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். குப்பை அகற்றம் தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழக்கறிஞர் சாய் சத்யஜித் ஆஜரானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து