Idhayam Matrimony

டிரம்ப் ஹோட்டல் முன் வெடித்து தீப்பிடித்த டெஸ்லா சைபர்ட்ரக்..! ஒருவர் உயிரிழப்பு - 7 பேர் காயம்

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2025      உலகம்
Trump

Source: provided

அமெரிக்கா: டிரம்புக்கு சொந்தமான ஹோட்டல் முன்பு வெடித்து தீப்பிடித்த டெஸ்லா சைபர்ட்ரக். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

லாஸ் வேகாஸில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிற்கு சொந்தமான ஹோட்டலுக்கு முன்பு டெஸ்லா சைபர்ட்ரக் தீ பிடித்து வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். நேற்றுமுன்தினம் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் போலீசார் கூறுகையில், தீவிபத்துக்கு முன்பு டெஸ்லா சைபர்ட்ரக் ஒன்று ஹோட்டலுக்கு முன்பு வந்து நிற்கிறது. அதன் பின்பு, திடீரென பட்டாசு வெடிப்பதைப் போல வெடித்து தீப்பிடித்து எரிந்தது என்று கூறினர்.

இதற்கு எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- டெஸ்லா சைபர்ட்ரக்கில் கொண்டு வரப்பட்ட வெடிகுண்டு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாகவும் இது வாகன தீவிபத்துக்கு தொடர்பில்லை என்று கூறி உள்ளார். இதனிடையே, வெடிவிபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து