எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் ரூ.120 கோடி சாலை திட்டத்தில் முறைகேடு நடந்ததை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் ஒருவர் செப்டிக் டேங்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் ரூ.120 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடந்துள்ளது. இதனை, உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்த முகேஷ் (வயது 28) என்பவர் அம்பலப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சாலை போடும் ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரிடம் அரசு விசாரணை நடத்தியது.
இந்த சூழலில், கடந்த 1-ம் தேதி முகேஷ் காணாமல் போய் விட்டதாக, அவரது அண்ணன் யுகேஷ் சந்திரசேகர் போலீஸில் புகார் அளித்தார். மேலும் ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரின் சகோதரர் ரிதேஷை சந்திக்க சென்ற பிறகு தான் அவர் மாயமானது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், கடந்த 3-ம் தேதி சுரேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான இடத்தில் உள்ள செப்டிக் டேங்கில், முகேஷ் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் சக பத்திரிகையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


