Idhayam Matrimony

பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      தமிழகம்
Anna-University 1

Source: provided

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அண்ணா பல்கலைக்கழக பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பட்டது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-  மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்களை மட்டுமே வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.  பல்கலைக்கழக வளாகத்தில் வெளிநபர்கள் நடைபயிற்சி செய்ய தடை. மாலை, இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலர்கள் ரோந்து செல்ல வேண்டும். வளாகத்தில் வெளிநபர்கள் வாகனங்களை நிறுத்த தடை. அவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை நேரத்திற்கு பிறகு பல்கலைக்கழக வளாகத்தில் தங்கக்கூடாது.

பல்கலைக்கழக வளாகத்தில் சிசிவிடி கேமரா, மின்விளக்குகள் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பல்கலைக்கழக வளாகத்தில் வெளிநபர்கள் வாகனம் கண்டறியப்பட்டால் போலீசில் புகார் அளிக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடி மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். என வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து