Idhayam Matrimony

பொங்கல் சிறப்பு ரெயில் முன்பதிவு டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      தமிழகம்
Tairn 2023-05-25

Source: provided

சென்னை : பொங்கல் சிறப்பு ரெயில் முன்பதிவு டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன.

தமிழ்நாட்டில் வருகிற 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனைத்தொடர்ந்து 15, 16 மற்றும் 18, 19 ஆகியவை அரசு விடுமுறை நாட்களாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவார்கள். இதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு ரெயிகள், பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில் உட்பட 5 கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்த்தன. 

அதன்படி 5 கூடுதல் சிறப்பு ரெயில்கள் விவரம் வருமாறு:-

தாம்பரம் - திருச்சி சிறப்பு ரெயில் 5, 10, 11, 12, 13, 17, 18, 19 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு மதியம் 12:30 மணிக்கு வந்தடையும். பின்னர் தாம்பரத்தில் இருந்து மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும். தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரெயில் வண்டி எண் (06093) வருகிற 13-ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்றுமுன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கும். தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரெயில் வண்டி எண் (06103) வருகிற 11, 13, 18 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 5:15 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். தாம்பரம் - நெல்லை சிறப்பு ரெயில் வண்டி எண் (06091) வருகிற 13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 3:30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:55 மணிக்கு நெல்லை சென்றடையும். சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு ரெயில் வண்டி எண் (06089) வருகிற 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து