எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சிட்னி : பந்துவீச அதிக சாதகமான பிட்ச்சில் பந்துவீச முடியாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாக இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
மதிப்பு கொடுக்க...
இது குறித்து பேசிய ஜஸ்பிரித் பும்ரா, "காயத்தால் விளையாட முடியாதது விரக்தியை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் உடலுடன் மல்லுக்கட்டாமல் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இந்த தொடரில் பந்துவீச அதிக சாதகமான பிட்ச்-இல் பந்துவீச முடியாமல் போனது ஏமாற்றம். முதல் இன்னிங்ஸில் விளையாடும் போதே, கொஞ்சம் அசவுகரியமாக உணர்ந்தேன். இதனால் தான் அந்த முடிவை எடுத்தேன். அப்போது மற்ற பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று பேசிக் கொண்டோம். ஒரு பந்துவீச்சாளர் குறைந்த நிலையில், மற்றவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய சூழல் உருவானது. காலை வெற்றிக்கு தேவையான போராட்ட குணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று பேசினோம்.
வருங்காலத்தில்...
இந்த தொடர் துவங்கியதில் இருந்தே நாங்கள் கடினமான போட்டியை வெளிப்படுத்தினோம். இதனால் நாங்கள் ஒருதலைபட்சமாக தோற்றோம் என்று அர்த்தமல்ல. டெஸ்ட் போட்டிகள் அப்படித்தான் செல்லும். நீண்ட நேரம் களத்தில் நின்று சூழ்நிலைக்கு ஏற்றவாரு விளையாடுவது முக்கியம். இதுபோன்ற அனுபவங்கள் எங்களுக்கு வருங்காலத்தில் உதவும். தங்கள் பலத்தை அடிப்படையாக வைத்து விளையாடிய இளம் வீரர்கள் நல்ல அனுபவம் பெற்றனர். தொடரை வெல்ல முடியாததால் அவர்கள் ஏமாற்றத்தை சந்தித்திருப்பார்கள். ஆனால் இந்த அனுபவத்தில் இருந்து அவர்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொள்வார்கள். இது சிறந்த தொடராக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள். அவர்கள் கடினமாக போராடினார்கள்," என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


