எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: தமிழக சட்டசபைக்கு நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தொடங்கியது. சட்டசபைக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என். ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்து கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், உரையாற்றாமல் சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு, கவர்னர் உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
தொடர்ந்து 2-வது நாள் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்மொழி ராஜதத்தனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின் சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், 3-வது நாள் சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் சட்டசபைக்கு நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்தனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


