எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய்: டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 4-வது இடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
இந்தியா - ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 5 இடங்களில் முறையே ஜோ ரூட், ஹாரி புரூக், வில்லியம்சன், ஜெய்ஸ்வால் மற்றும் டிராவிஸ் ஹெட் மாற்றமின்றி தொடருகின்றனர்.
6-வது இடத்தை...
இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா 3 இடங்கள் முன்னேறி அவரது கெரியரின் சிறந்த தரநிலையாக 6-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் இந்திய தரப்பில் ஜெய்ஸ்வால் (4-வது இடம்) மற்றும் ரிஷப் பண்ட் (9-வது இடம்) மட்டுமே உள்ளனர்.
ஸ்காட் போலன்ட்...
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் பும்ரா மாற்றமின்றி முதல் இடத்தில் தொடருகிறார். அவருக்கு அடுத்து கம்மின்ஸ் 2-வது இடத்தையும், ரபடா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஜோஷ் ஹெசில்வுட் 2 இடங்கள் சரிந்து 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் அசத்திய ஸ்காட் போலன்ட் 29 இடங்கள் முன்னேற்றம் ஜடேஜாவுடன் 9-வது இடத்தை பகிர்ந்துள்ளார். டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சென் 2-வது இடத்திலும், வங்காளதேசத்தின் மெஹதி ஹசன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


