Idhayam Matrimony

டெல்லியில் குடியரசு தின விழா: 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      இந்தியா
Delhi 2024-10-19

Source: provided

புதுடெல்லி: டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க 10 ஆயிரம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் மக்களின் பங்கேற்பை அதிகரிப்பதை மத்திய அரசு நோக்கமாக கொண்டு உள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு முக்கிய விழாக்களுக்கு சாமானிய மக்களும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார்கள். இதன்படி டெல்லி கடமைப்பாதையில் வருகிற 26-ந் தேதி  நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கும் பொதுமக்களில் பல தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் 10 ஆயிரம் பேர் அழைப்பை பெறுகிறார்கள்.

கிராமத்தை கவனிக்கும் முக்கிய நபர்கள், பேரிடர் நிவாரண பணியாளர்கள், சிறந்த கிராமங்களின் முக்கியஸ்தர்கள், வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாவலர்கள், கைவினைஞர்கள், கைத்தறி கைவினைஞர்கள், பல்வேறு திட்டங்களின் சாதனையாளர்கள், அங்கீகாரம் பெற்ற சமூகநல ஆர்வலர்கள், 'மன் கி பாத்' பங்கேற்பாளர்கள், பாரா ஒலிம்பிக் வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட 31 பிரிவுகளில் பொதுமக்கள் அழைக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்பது மட்டும் அல்லாமல் தேசிய போர் நினைவிடம், பிரதமர் சங்கராலயா போன்ற இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் பிற நாடுகளின் தலைவர்களும் முக்கிய விருந்தினராக பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து