எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பலியான சிறுமி லியா லட்சுமியின் குடும்பத்துக்கு பள்ளியின் தாளாளர், முதல்வர் ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
விக்கிரவாண்டியைச் சேர்ந்த பழனிவேல் மகள் லியாலட்சுமி (4). இவர், அங்குள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி.படித்து வந்தார். கடந்த 3-ஆம் தேதி மதியம் உணவு இடைவேளையின் போது சக மாணவ, மாணவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த லியாலட்சுமி, பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து பள்ளித் தாளாளர் எமல்டா, முதல்வர் டோமினிக் மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகிய மூவரையும் கைது செய்தனர். உடல்நலக் குறைவால் தாளாளர், முதல்வர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆசிரியை மட்டும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில், பள்ளித் தாளாளர் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற முதன்மை அமர்வு கடந்த புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறது. வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்று காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மூவரும் சென்னையில் ஒரு வாரம் தங்கி இருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். மேலும் பலியான சிறுமி லியா லட்சுமியின் குடும்பத்துக்கு பள்ளியின் தாளாளர், முதல்வர் ஆகியோர் ரூ.5 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


