எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராய்ப்பூர் : சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நக்சலைட்டுகள் 9 பேர் நேற்று சரணடைந்தனர். அவர்களுக்கு ரூ.43 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஷ்கார் உள்ளது. இம்மாநிலத்தில், நக்சலைட்டுகள் அதிகளவில் நடமாடி வருவதால் அவர்களை ஒடுக்கும் பணியில் மாநில போலீசாருடன் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக நக்சலைட்டுகள் பலர் தங்களுடைய ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நக்சலைட்டுகள் 9 பேர் அம்மாவட்ட எஸ்.பி. கிரண் முன்னிலையில் நேற்று போலீசில் சரணடைந்தனர். சரணடைந்த 9 நக்சலைட்டுகளில் இரண்டு பெண்கள் அடங்குவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சரணடைந்தவர்கள் அனைவருக்கும் மொத்தமாக ரூ.43 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
சரணடைந்த நக்சல் ஒருவருக்கு ரூ.8 லட்சம் பரிசுத் தொகையும், மேலும் நால்வருக்கு ரூ.5 லட்சமும், பெண் நக்சலுக்கு ரூ.3 லட்சமும், மேலும் இருவருக்கு தலா ரூ.2 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு, சுக்மா உள்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பகுதியில் 792 நக்சலைட்டுகள் சரணடைந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


