எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவனியாபுரம், உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போல அல்லாமல், தண்டவாள வாடிவாசல் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கானப் பணிகள் நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக மதுரை மாநகராட்சி சார்பாக 54 லட்சத்து 26 ஆயிரத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக கால்நடை பரிசோதனை மையத்தில் தடுப்பு வேலி மற்றும் வாடிவாசலுக்கு பின்புறம் காளைகள் இருக்கக்கூடிய இடங்களில் தடுப்பு வழிகள் அமைக்கப்பட்ட நிலையில். நேற்று முதல் முறையாக தண்டவாள வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று விழா மேடை, குடிநீர் மேடை அமைப்பது, சாலை இருபுறமும் பார்வையாளர்களை தடுக்கும் வேலி, சாலையை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முக்கிய அம்சமாக விளங்கக்கூடிய வாடிவாசல் அமைக்கும் பணி நேற்று தொடங்கி நேற்றும நடைபெற்றது. எந்த முறையும் இல்லாத அளவிற்கு இந்த முறை தண்டவாள வாடிவாசல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் முறையாக தண்டவாளம் வாடிவாசல் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் வாடிவாசல் பணியில் நேற்றுடன் முடிவடைகிறது. அதன் பின் மேடை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முன்னேற்பாடு பணிகள் 70 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது முன்னேற்பாடு பணிகள் தீவிர படுத்தப்பட்டு காளைகள் சேகரிக்கும் இடம் மருத்துவ பரிசோதனை முடிந்து வாடிவாசல் நோக்கி வரக்கூடிய பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சவுக்கு மரங்களால் தடுப்பு அமைக்கப்பட்டு அதன் பின் இரும்பு தடுப்புகளால் வேலிகள் அமைக்கப்படும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


