Idhayam Matrimony

டெல்லி பா.ஜ.க. முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய அரவிந்த் கெஜ்ரிவால் யார்? - மத்திய அமைச்சர் அமித்ஷா கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      இந்தியா
Amit-Shah 2

Source: provided

புதுடெல்லி : பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் யாரென கெஜ்ரிவால் முடிவு செய்ய முடியுமா? இதுபோன்று கூறுவதற்கு அவர் யார்? என்று அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.  

டெல்லியில் 70 தொகுதிகளை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கியது. 17-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 18-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 20-ந்தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். வாக்கு பதிவு பிப்ரவரி 5-ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை 8-ந்தேதியும் நடைபெறும்.

இந்த தேர்தலில், ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பணியாற்றி வருகின்றன. இந்நிலையில், ஆம் ஆத்மி நிறுவனரான கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறும்போது, பா.ஜ.க. தோல்வி பயத்தில் முதல்வர்  வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது என கூறியுள்ளார்.

அத்துடன், மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்ட தெற்கு டெல்லியின் முன்னாள் எம்.பி.யான ரமேஷ் பிதூரியின் பெயர் டெல்லி சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ.க.வில் இறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர், முதல்வர்  அதிஷிக்கு எதிராக கல்காஜி தொகுதியில் போட்டியிடுகிறார். அதுவும் முதல்வர்  வேட்பாளராக என்று கூறியுள்ளார். இது பா.ஜ.க. மத்தியில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறும்போது, கெஜ்ரிவால் இல்லாத விசயம் ஒன்றை புரளியாக கிளப்புகிறார் என குற்றச்சாட்டாக கூறியதுடன், பொதுமக்களின் அறிவை அவர் சூழ்ச்சியாக கையாள பார்க்கிறார் என்றார். பா.ஜ.க.வின் முதல்வர்  வேட்பாளர் யாரென கெஜ்ரிவால் முடிவு செய்ய முடியுமா? இதுபோன்று கூறுவதற்கு அவர் யார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து