Idhayam Matrimony

டொனால்டு டிரம்ப் பதவியேற்பு விழா: இந்தியா சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      இந்தியா
Jaishaker 2024-12-03

Source: provided

புதுடெல்லி : அமெரிக்கா அதிபர் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப், வரும் 20ம் தேதி அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். பதவிக்காலம் முடிவடையும் ஜனாதிபதி ஜோ பைடன், விழாவில் கலந்து கொண்டு அதிகாரத்தை அவரிடம் ஒப்படைப்பார். பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு டிரம்ப் உரையாற்றுவார். இவ்விழாவில் பல நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து டிரம்ப் - வான்ஸ் பதவியேற்பு குழுவின் அழைப்பின் பேரில், இந்தியா சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பார் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பதவியேற்பு விழா முடிந்ததும், புது நிர்வாகத்தினரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஜெய்சங்கர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து