எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கெய்ரோ : இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. போர் நிறுத்தம் மற்றும் ஹமாஸ் பிடித்துச் சென்ற பணயக் கைதிகள் விடுதலை தொடர்பாக சுமுகமான ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. ஆனால் கருத்தொற்றுமை ஏற்படாததால் இந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் மீண்டும் முடங்கின.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு நடந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரமின்மையை ஏற்படுத்திய இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, வரும் நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.
இந்த ஒப்பந்தத்தை நிச்சயமாக ஏற்க மீண்டும் என ஹமாஸ் அமைப்புக்கு கத்தாரின் மத்தியஸ்தர்கள் அழுத்தம் கொடுத்தனர். அதேபோல் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காப், இஸ்ரேல் தரப்புக்கு அழுத்தம் கொடுத்து வந்தார் என்று பேச்சுவார்த்தையை நன்கு அறிந்த ஒருவர் கூறியிருக்கிறார்.
மத்தியஸ்தர்கள் வரைவு ஒப்பந்தத்தை இரு தரப்பினருக்கும் வழங்கியதாகவும், அடுத்த 24 மணிநேரம் மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் அந்த நபர் கூறினார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பில் பங்கேற்ற பேச்சுவார்த்தையாளர்கள் இப்போது வரைவு ஒப்பந்தத்தை இறுதி ஒப்புதலுக்காக தங்கள் தலைவர்களுக்கு அனுப்புவார்கள். தலைமையின் முடிவைப் பொருத்து அடுத்தகட்ட நகர்வு இருக்கும். இந்த முறையாவது ஒப்பந்தம் ஏற்படுமா? என பாலஸ்தீனியர்களும் பணயக்கைதிகளின் குடும்பத்தினரும் எதிர்பார்க்கிறார்கள்.
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் காசாவின் பெரும்பாலான பகுதிகள் அழிந்துவிட்டன. மொத்தம் உள்ள 2.3 மில்லியன் மக்களில் 90 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பேச்சு வார்த்தைகள் அடுத்தடுத்து தோல்வியில் முடிந்ததால் இஸ்ரேலின் தாக்குதல் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை பாலஸ்தீனியர்களிடையே குறைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கேள்விப்படுகிறோம். ஆனால் முடிவு எதுவும் ஏற்படவில்லை. எனவே, செயல்பாட்டிற்கு வந்தால்தான் போர் நிறுத்தம் இருப்பதாக நாங்கள் நம்புவோம். என காசாவின் கான் யூனிஸ் பகுதியைச் சேர்ந்த மஸன் ஹம்மாத் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


