எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராஜ்கோட் : அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 116 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில் கடைசி போட்டியில் இந்திய அணி 435 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.
மந்தனா - பிரதிகா....
இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீராங்கனைகளாக மந்தனா - பிரதிகா ராவல் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய மந்தனா அவ்வபோது சிக்சர்களை பறக்கவிட்டார். அவர் 80 பந்தில் 135 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 12 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடங்கும். தொடர்ந்து விளையாடிய பிரதிகா ராவலும் 129 பந்தில் 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிச்சா ஹோஷ் (59) அரை சதம் விளாசி அவுட் ஆனார்.
435 ரன்கள் குவிப்பு
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 435 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. மேலும் அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியலில் இந்தியா 4 -வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் நியூசிலாந்து அணி உள்ளது.
ஆண்கள் சாதனை முறியடிப்பு...
இதனையெல்லாம் விட ஒருநாள் போட்டியில் ஆண்கள் இந்திய அணி குவித்த ரன்களை விட பெண்கள் அணி ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. ஆண்கள் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 418 எடுத்ததே அதிக ரன்களாக இருந்தது. அதனை தற்போது பெண்கள் முறியடித்துள்ளது.
மந்தனா புதிய சாதனை:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஹர்மன்பிரீத் கௌரின், 87 பந்துகளில் சதமடித்த சாதனையை முறியடித்து, ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையைப் படைத்தார் ஸ்மிருதி மந்தனா. மேலும், இது மந்தனாவுக்கு 10-வது ஒருநாள் சதமாக அமைந்தது. அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் டாமி பேமோண்ட்டுடன் 3-வது இடத்தில் உள்ளார் ஸ்மிருதி. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் 15 சதங்களுடன் முதலிடத்திலும், நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் 13 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


