Idhayam Matrimony

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கழிப்பறைகள்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கழிப்பறைகள் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் அணுகக் கூடியதாகவும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக் கூடிய வகையிலும் பொது கழிப்பறைகளை கட்ட உத்தரவிட வேண்டு எனக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜே.பி.பர்திவாலா, நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "கழிப்பறை என்பது வசதிக்கானது மட்டுமல்ல, மனித உரிமையின் அடிப்படை அம்சமாகும்" என்று குறிப்பிட்டனர்.

மேலும், "அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ், சரியான சுகாதார வசதி என்பது ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது வாழ்வுரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை உறுதி செய்கிறது" என்று தெரிவித்த நீதிபதிகள், அனைத்து கோர்ட்டுகளிலும், குறிப்பாக முறையான வசதிகள் இல்லாத இடங்களில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் எளிதில் அணுகக்கூடிய கழிப்பறை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டு வளாகங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு தனித்தனி கழிப்பறைகளை கட்ட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த பணிகளை கண்காணிக்க 6 வாரங்களுக்குள் அனைத்து மாநில ஐகோர்ட்டுகளிலும் ஒரு நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து