Idhayam Matrimony

டெல்லி சட்டசபை தேர்தல்: மணீஷ் சிசோடியா வேட்புமனு தாக்கல்

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      இந்தியா
Manish 2023-10-19

புதுடெல்லி, டெல்லி சட்டசபை தேர்தலில் மணீஷ் சிசோடியா தனது  வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். 

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி சட்டசபை தேர்தலுக்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில், ஜங்புரா தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமானமணீஷ் சிசோடியா நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,  நான் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராகவும், அரவிந்த் கெஜ்ரிவாலின் சிப்பாயாகவும் ஜங்புரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். ஜங்புரா மக்கள் கடந்த 10 ஆண்டுகளில் அளித்த அன்பை இந்த முறையும் ஆம் ஆத்மி கட்சிக்கு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். கல்வி, சுகாதாரம் மேம்பாடு மூலம் மக்களின் எதிர்காலத்திற்கு பங்களிக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் நான் எனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து