எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் விண்வெளி டாக்கிங் பரிசோதனை என்ற நவீன தொழில்நுட்ப அறிவு பணிக்காக இஸ்ரோ 2 செயற்கைக்கோள்களை வடிவமைத்தது. அவற்றிற்கு சேசர் டார்கெட் என பெயரிடப்பட்டது. தலா 220 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் செலுத்தியநிலையில், விண்வெளியில் 2 செயற்கைக்கோள்களையும் இணைய வைக்கும் சோதனையில் இஸ்ரோ ஈடுபட்டு வந்தது.
இந்த சூழலில் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளி டாக்கிங் பரிசோதனை திட்டத்தின் வழியே 2 செயற்கைக்கோள்களும் ஒன்றிணைக்கப்பட்டன. ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இதனை மேற்கொள்ளும் 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்நிலையில் இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றிபெற்றதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-
விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகரமான செயல் விளக்கத்திற்காக இஸ்ரோ குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள். ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி இந்தியாவிற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் தருணம், ஏனெனில் அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவிற்குப் பிறகு விண்வெளியில் இணைக்கும் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற நான்காவது நாடாக இது திகழ்கிறது. இந்த மகத்தான சாதனையை அடைய கடுமையாக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


