Idhayam Matrimony

தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவர் 21-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      தமிழகம்
BJP 2024-03-05

Source: provided

சென்னை: தமிழக பா.ஜ.க தலைவர்  அண்ணாமலையின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில், ஜன.21-ம் தேதி புதிய மாநில தலைவர் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பா.ஜ.க கட்சியின் விதிமுறைப்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோல் ஒருவருக்கு 2 முறை மாநில தலைவர் பதவி வழங்கலாம். அந்த வகையில், 2021-ம் ஆண்டு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி  அண்ணாமலை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், அவருடைய பதவிக் காலம் நிறைவடைகிறது.

தற்போது பா.ஜ.க கிளை நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களுக்கான தேர்தல்கள் முடிந்த நிலையில்,   புதிய தலைவர் தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஜன.20-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிலக்கரி துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்துகொண்டு பா.ஜ.க மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் பதவிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டு பா.ஜ.க தலைமைக்கு பரிந்துரைக்கு அனுப்பிவைக்கப்படும். அதில் ஒருவருக்கு பா.ஜ.க மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்படும். ஒருவர் 2 முறை தலைவராக இருக்கலாம் என்பதால் அண்ணாமலைக்கு மீண்டும் தலைவர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், ஹெச்.ராஜா, பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோருக்கும் வாய்ப்புள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து