Idhayam Matrimony

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னை திரும்புவோர் பயண திட்டத்தை மாற்றி அமைக்குமாறு அரசு வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      தமிழகம்
BUS 2024-08-25

Source: provided

சென்னை : பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றிருப்பவர்கள், சென்னை திரும்புவதற்கான பயண திட்டத்தை மாற்றி  அமைக்குமாறு போக்குவரத்துத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை முதல் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர், சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். வெள்ளிக்கிழமை முதல் திங்கள் கிழமை வரை படிப்படியாக சொந்த ஊர் சென்றவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் நாளை (ஜனவரி 19ஆம் தேதி) மாலை அல்லது நாளை மறுநாள்  (ஜனவரி 20ஆம் தேதி) காலையில் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற நாள்களில் சென்னையில் தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சென்னை திரும்பும் மக்கள் பயண திட்டங்களை மாற்ற வேண்டும் என்று மக்களுக்கு போக்குவரத்துத்துறை வேண்டுகோள் விடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, வரும் 19ஆம் தேதி மாலை முதல் ஒரே நேரத்தில் அனைவரும் சென்னை திரும்பினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  எனவே அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மாலையே சென்னையை வந்தடையும் வகையில் பயணத் திட்டத்தை மேற்கொள்ளாமல், சனிக்கிழமை மாலை அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்னை வரும் வகையில், தங்களின் பயண திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து