எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : நடிகர் சைப் அலிகான் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
நடிகர் சைப் அலி கானை தாக்கிய நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், விசாரணையில் அவர் காவல் துறை அதிகாரிகளிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ள முக்கிய தகவல்களை மும்பை காவல் துறை செய்தியாளர்களுடன் தெரிவித்துள்ளது.
மும்பை துணை காவல் ஆணையர் தீக்ஷித்குமார் அசோக் கெடாம் கூறியதாவது: கைதாகியுள்ள நபர் நடிகர் சைப் அலி கான் வீட்டுக்குள் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கடந்த 16-ஆம் தேதி சென்றுள்ளார். 30 வயதான அந்த நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும், முகம்மது ஷரிஃபுல் இஸ்லாம் ஷேஸாத் என்ற இயற்பெயர் கொண்ட அவர், ‘விஜய் தாஸ்’ என்று பெயர்மாற்றம் செய்து கொண்டு கடந்த 6 மாதங்களாக இந்தியாவில் வசித்து வந்துள்ளார்.
அவரிடம் மத்திய தரப்பில் வழங்கப்படும் அரசு ஆவணங்கள் ஏதுமில்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன் அவர் மும்பை வந்தடைந்து இங்குள்ள வீட்டு வேலை பணி சார் ஆள்களை நியமிக்கும் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்துள்ளார். நீதிமன்றத்தில் அந்த நபர் ஆஜர்படுத்தப்பட்டபின் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றத்தில் வாதிடப்படும் என்றார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரச வம்சத்தை சேர்ந்தவருமான பட்டோடியின் மகனான நடிகர் சைப் அலி கான் வீட்டுக்குள் நுழ்ந்த நபரை அவர் கையும் களவுமாகப் பிடித்து விசாரித்தபோது அந்த நபர் கத்தியால் சைப் அலி கானை குத்தி விட்டு தப்பிவிட்டார். இதில் சைப் அலி கான் படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் விழுந்த சைப் அலி கான் அதன்பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிர் தப்பியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


