Idhayam Matrimony

பீகாரில் நிகழ்ந்த சோகம்: கங்கையில் படகு கவிழ்ந்து 3 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      இந்தியா
Boot 2024 07 22

Source: provided

பாட்னா : பீகாரில் கங்கையில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாயமான 4 பேரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

பீகார் மாநிலம், கதிஹர் மாவட்டத்தில் 17 பேருடன் கங்கையில் சென்ற படகு அம்தாபாத் பகுதியில் உள்ள கோலாகாட் அருகே நேற்று காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் கரைக்கு நீந்திச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாயமான 4 பேரை மீட்கும் பணி இன்னும் நடந்து வருகிறது.

இந்த விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மனேஷ் குமார் மீனா தெரிவித்தார். பலியானவர்களில் இருவர் பவன் குமார் (60) மற்றும் சுதிர் மண்டல் (70) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவரை இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து