Idhayam Matrimony

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் கலாச்சார மையத்தால் உலக தமிழர்கள் மகிழ்ச்சி: எல்.முருகன்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      தமிழகம்
Murugan 2023 04 02

Source: provided

சென்னை : யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று மத்திய அமைச்சர்  எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- "பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2015-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 'யாழ்ப்பாணம் கலாச்சாரம் மையம்' திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன்.

பல்வேறு விதமான நவீன வசதிகளுடனும், இரண்டு தேசங்களுக்கும் இடையிலான உறவை குறிக்கின்ற வகையில் காட்சிபடுத்தப்பட்டுள்ள கல்வெட்டுகள் மற்றும் பழங்கால படிமங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கலாச்சார மையத்திற்கு, தற்போது அய்யன் வள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது மிகுந்த பொருத்தமானதாக அமைந்துள்ளது. மேலும், இரண்டு தேசங்களுக்கும் இடையிலான கலாச்சார உறவானது வலுப்பெறும் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.

பிரான்ஸ் நாட்டின் செர்ஜி நகர் உள்ளிட்ட வெளிநாடுகளில் திருவள்ளுவருக்கு சிலை வைத்தும், ஐ.நா. சபை போன்ற உலகின் மாபெரும் அரங்குகளில் திருக்குறளையும், தமிழ் இலக்கிய வரிகளையும் குறிப்பிட்டு பெருமைப்படுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.  உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார். தற்போது இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது." இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து