Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: யாருக்கு ஆதரவு? ஓ.பி.எஸ். பதில்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      தமிழகம்
Ops 2024-12-13

Source: provided

திண்டுக்கல் : ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி காலமானார். இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியிடுகிறது. அ.தி.மு.க, பா.ஜ.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. 55 பேர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது.

இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கவில்லை. யாருக்கும் ஆதரவில்லை... வாக்களிப்போம். ஆனால் யாருக்கு என்பது ரகசியம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து