Idhayam Matrimony

ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு : விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      இந்தியா
Rahul 2024-12-03

Source: provided

புதுடெல்லி : ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பாக பா.ஜ.க தொண்டர் நவீன் ஜா என்பவர் ஜார்கண்ட் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜார்கண்ட் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஜார்கண்ட் ஐகோர்ட்டில் நடைபெறும் விசாரணையை தடை செய்யக் கோரியும், வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும் ராகுல் காந்தி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர் அல்லாத ஒருவர் எப்படி புகார் அளிக்க முடியும் என்று ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து, மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை விசாரிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து