Idhayam Matrimony

பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனிடம் விடிய, விடிய சிறப்புக்குழுவினர் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      தமிழகம்
anna-university 2025-01-21

Source: provided

 சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஞானசேகரனிடம் விடிய விடிய சிறப்புக்குழுவினர் விசாரணை நடத்தினர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23-ந் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு போலீசார்,   முதற்கட்டமாக சிறையில் உள்ள ஞானசேகரனின் வீடு மற்றும் சம்பவம் நடந்த அண்ணா பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

பின்னர்,  ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர்.  சிறப்பு புலனாய்வு குழு கோரிய 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து ஞானசேகரனிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அழைத்து சென்றனர்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக காவலில் எடுக்கப்பட்டுள்ள ஞானசேகரனிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று முன்தினம் எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து ஞானசேகரனிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின் நேற்று அதிகாலையில் அண்ணா நகர் துணை ஆணையர் அலுவலகத்திற்கு ஞானசேகரன் அழைத்து செல்லப்பட்டார். அண்ணா நகர் துணை ஆணையர் சினேக பிரியா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு வழக்கை விசாரித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து