எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சிவமுருக ஆதித்தன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘ஆதார் அட்டை ஒவ்வொரு நபருக்குமான தனிப்பட்ட அடையாளம். ஆதாரில் ஒருவரின் முழு அடையாளங்களான கைரேகை, புகைப்படம், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, வேறு நபர் ஒருவரின் ஆதார் அட்டை தொடர்பாக எந்த முறைகேடும், செய்ய இயலாது.
நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குமான வாக்குரிமையை இந்திய அரசியலமைப்பு உறுதி செய்கிறது. எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி தேர்தல் காலத்தில் ஒவ்வொரு குடிமகனின் வாக்கையும் பெற வாக்காளர் அடையாள அட்டை அவசியமான ஆவணமாகும்.
எனவே, முறைகேடுகளை தடுக்கும் வகையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க உத்தரவிட வேண்டும்,’ என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ. டி.மரிய கிளாட் அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், ஏற்கெனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆகவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


