எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையின் அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளன. இதில் முன்னணி வீரர்களான ரோகித், ஜடேஜா, சிராஜ், பண்ட் உள்ளிட்ட பல வீரர்கள் விளையாட உள்ளனர்.
கடும் விமர்சனங்கள்
சமீபத்தில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வி கண்டது. இதில் ரோகித் சர்மா, விராட்கோலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. இதன் காரணமாக ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் அனைவரும் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து உடல் தகுதி பிரச்சினை இல்லாத சமயத்தில் உள்ளூர் போட்டிகளில், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியது. இதனால் உள்ளூர் போட்டிகளில் முன்னணி வீரர்கள் விளையாட உள்ளனர்.
விளையாட தயார்
இதில் நட்சத்திர வீரரான விராட் கோலி, கழுத்து வலி காரணமாக 23-ம் தேதி தொடங்கும் டெல்லி அணியின் சவுராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் இடம்பெறவில்லை. இதனால் அவர் மீது சிலர் குறை கூறினர். இந்நிலையில் டெல்லி அணியின் அடுத்த லீக் ஆட்டத்தில் (30-ந்தேதி ரெயில்வே அணிக்கு எதிராக) விளையாட தயாராக இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். இதனை டெல்லி அணி நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. விராட் கோலி கடைசியாக 2012-ம் ஆண்டு உத்திரபிரதேசத்துக்கு எதிராக ரஞ்சி போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு தற்போதுதான் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணியில்...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி ஜம்மு - காஷ்மீர் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆட்டம் மும்பையில் உள்ள எம்.சி.ஏ-பி.கே.சி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான மும்பை அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக அஜிங்க்ய ரஹானே தொடர்கிறார்.
விமர்சனங்களுக்கு...
சொந்த மண்ணில் நியூஸிலாந்துக்கு எதிராகவும், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் ரோகித் சர்மாவின் பார்ம் பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்திருந்தது. இதைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து இந்திய வீரர்களும் உள்ளூர் தொடர்களில் விளையாட வேண்டும் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது. இதன் காரணமாக ரோகித் சர்மா, பார்மை மீட்டெடுக்கும் விதமாக ரஞ்சி கோப்பையில் களமிறங்குகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


