எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : உங்கள் திறமை மீது தன்னம்பிக்கை இருந்து, நீங்களும் பலமாக இருந்தால் போதுமானது. வேறெதுவும் தேவையில்லை என இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார்.
மீண்டும் ஷமி...
கடைசியாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டி 2023-ல் விளையாடிய முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து வெளியேறினார். பின்னர் அறுவைச் சிகிச்சை செய்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். பி.ஜி.டி. தொடரில் பங்கேற்பாரென பலரும் எதிர்பார்த்த நிலையில் பி.சி.சி.ஐ. அவரை தேர்வு செய்யவில்லை. அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் பங்கேற்பாரென பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. 2014இல் இருந்து 23 டி20 போட்டிகளில் மட்டுமே ஷமி விளையாடியுள்ளார். 34 வயதாகும் முகமது ஷமி நேற்று இரவு தொடங்கிய இங்கிலாந்துடனான டி20 தொடரில் கம்பேக் தந்தார்.
காத்திருந்தேன்....
இந்த நிலையில் முகமது ஷமி கூறியதாவது: நான் ஒரு ஆண்டு முழுவதும் காத்திருந்தேன். மீண்டும் உடல் நலத்தைப் பெற கடினமாக உழைத்தேன். குணமாகிவரும்போது மீண்டும் காயமடைந்ததால் மிகவும் பயந்தேன். முழு வீச்சில் இருக்கும் ஒருவர் காயம்பட்டு என்சிஏக்கு (தேசிய கிரிக்கெட் அகாடமி) சென்று மீண்டு வருவது மிகவும் கடினமானது. காயம் ஏற்படும்போது, ஒரு விளையாட்டு வீரனாக நீங்கள் பலமடைகிறோம் என நினைக்கிறேன். மனதளவில் வலுவாக இருக்கும்போது மீண்டும் மீண்டும் ஒரு சில விஷயங்களை செய்வோம்.
திறமை மீது....
என்ன முடிந்ததோ அது முடிந்தது. நான் காயத்திலிருந்து குணமடைந்து வந்துவிட்டேன். கடினமாக உழைத்தால் நல்ல முடிவுகள் கிடைக்கும். நான் அதைத்தான் நம்புகிறேன். காயமானாலும் நாட்டுக்காக உங்களது அணிக்காக மீண்டு வரவேண்டும். அதனால் சண்டையிடுங்கள், முன்னேறுங்கள். உங்கள் திறமை மீது தன்னம்பிக்கை இருந்து, நீங்களும் பலமாக இருந்தால் போதுமானது. வேறெதுவும் தேவையில்லை. எதை செய்வதற்கும் தன்னம்பிக்கை போதுமானது. ரிதம் முக்கியமானது. வாழ்க்கையில் அனைத்தும் ஒரு ஒழுங்கில் இருக்கும். உடல்நிலை, மன நிலை, திறமை என அனைத்தும் பந்துவீச்சுக்கு முக்கியம் எனக் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


