எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கென மத்திய அரசு இதுவரை எந்த உதவியும் வழங்கவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரள சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, வயநாடு தொகுப்புக்காக பெறப்பட்ட தொகை குறித்து ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ. குருக்கோளி மொய்தீன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்தார். அப்போது அவர், “வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பிறகு முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்காக மத்திய அரசு ரூ.712.98 கோடி வழங்கியது. இதைத் தவிர, இம்மாதம் 17-ம் தேதி வரை வேறு எந்த உதவியையும் மத்திய அரசு வழங்கவில்லை.
நிலச்சரிவு மறுவாழ்வுக்காக ஆரம்பத்தில் மத்திய அரசிடமிருந்து ரூ.2,221 கோடி கோரினோம். பேரிடருக்குப் பிந்தைய தேவைகள் மதிப்பீடு அறிக்கையின்படி, இன்னும் அதிக நிதி தேவைப்படுகிறது. வயநாடு நிலச்சரிவை 'கடுமையான இயற்கை பேரழிவு' என்று மத்திய அரசு அறிவித்ததால், நாடு முழுவதும் உள்ள எம்.பி.க்கள் ரூ.1 கோடி வரை பங்களிக்கலாம். எனவே, உதவி கோரி நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் நான் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன்.
முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்காக பெறப்பட்ட நிதி பேரிடரில் இருந்து தப்பியவர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும். மறுவாழ்வு செயல்முறை விரைவில் முடிக்கப்படும். ஜூலை 30 அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து தப்பியவர்களுக்காக, கல்பெட்டாவில் உள்ள எல்ஸ்டோன் எஸ்டேட்டில் 58.50 ஹெக்டேர் மற்றும் வயநாடு மாவட்டத்தில் உள்ள மெப்படி பஞ்சாயத்தில் உள்ள நெடும்பலா எஸ்டேட்டில் 48.96 ஹெக்டேர் பரப்பளவில் மாதிரி டவுன்ஷிப்களை கட்டுவதற்கான மறுவாழ்வுத் திட்டத்தை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


