Idhayam Matrimony

டெல்லியில் கழிவுநீர் பிரச்னைக்கு முன்னுரிமை: கெஜ்ரிவால் உறுதி

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      இந்தியா
Kejrival 2024-01-05

Source: provided

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் கழிவுநீர் தொடர்பான பிரச்னைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்ப்பதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்தார்.

டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்.5ல் நிகழவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட உள்ளனர்.

 இந்நிலையில், தலைநகரில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கழிவுநீர் தொடர்பான பிரச்னைகள் களையப்படும் என்று உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட விடியோ பதிவில், நகரில் அங்கீகரிக்கப்படாத இடங்களில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை எடுத்துரைத்தார். இந்தப் பகுதிகளில் அடிப்படை உள்கட்டமைப்பை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமைத்தபோது ஒருசில காலனிகளில எந்த வளர்ச்சிப் பணிகளும் இல்லாமல் இருந்தது. எந்த அரசும் இங்கு வாழும் மக்களைப் பற்றி கவலையோ, எந்த பணியும் செய்யவில்லை. மேம்பாட்டுப் பணிகளை ஆம் ஆத்மி அரசு தொடங்கியது. நகரத்தில் உள்ள பல பகுதிகள் கழிவுநீர் குடிநீரை மாசுபடுத்தும் பிரச்னைகளில் மக்கள் சிக்கித் தவிக்கின்றது. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைத்தால், நகரம் முழுவதும் உள்ள கழிவுநீர் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன் என்று அவர் கூறினார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது, முடிவுகள் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து