Idhayam Matrimony

பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      இந்தியா
Gun 2023 04 17

Source: provided

அம்பாலா : பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 

அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தின் நரயின்கார் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகியான ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா அவரது நண்பர்களான புனித் மற்றும் குகல் ஆகிய இருவருடன், நேற்று முன்தினம் மாலை அவர்களது காரில் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காரில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த தாக்குதலில் ஹர்பிலாஸ் மற்றும் புனித் ஆகிய இருவரின் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு சண்டிகரிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த புனித் தற்போது நலமாகவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து