எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கேன்பராக் : ஆஸி. ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் மேடிசன் கீஸ் பிரபல வீராங்கனை சபலென்காவை வீழ்த்தினார்.
நேர் செட்களில்...
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இந்தப் போட்டியில் கீஸ் 6-3, 2-6, 7-5 என 2 செட்களில் வென்று ஆஸி. ஓபன் பட்டத்தை வென்றார். இது இவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
4 வெற்றிகளுடன்...
இதற்கு முன்பு 2017இல் கீஸ் யுஎஸ் ஓபனில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார். இரண்டாவது முறையாக இறுதிச் சுற்றில் தனது முதல் பட்டத்தை தன்வசப்படுத்தினார். இறுதிச்சுற்றில் மோதும் சபலென்கா - கீஸ் இதுவரை 6 முறை நேருக்கு நேர் சந்தித்திருக்க, சபலென்கா 4 வெற்றிகளுடன் முன்னிலையில் இருந்தாலும் கீஸ் இறுதிச் சுற்றில் அசத்தினார். ஆஸ்திரேலிய ஓபனில் கடைசி இரு சீசன்களிலுமே சாம்பியனான சபலென்கா, தற்போது ‘ஹாட்ரிக்’ கோப்பை வெல்லும் வாய்ப்பினை இழந்தார்.
கலப்பு இரட்டையர்...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ் - ஒலிவியா காடெக்கி ஜோடி, சகநாட்டு இணையான ஜான்-பேட்ரிக் ஸ்மித் - கிம்பர்லி பிர்ரெல் ஜோடியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ஜான் பியர்ஸ் - ஒலிவியா காடெக்கி ஜோடி, ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-4, 10-6 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் 3-6, 6-4, 10-6 என்ற செட் கணக்கில் ஜான்-பேட்ரிக் ஸ்மித் - கிம்பர்லி பிர்ரெல் ஜோடியை வீழ்த்திய ஜான் பியர்ஸ் - ஒலிவியா காடெக்கி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


