Idhayam Matrimony

டெல்லியில் குடியரசு தின விழா: பிரமிக்க வைத்த முப்படைகளின் அணிவகுப்பு-அலங்கார ஊா்திகள்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2025      இந்தியா
PM 2025-01-26

Source: provided

புதுடெல்லி : குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊா்திகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.

நாடு முழுவதும் குடியரசு தின விழா நேற்று (ஜன. 26) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமை பாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார். அதனைத்தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். நிகழாண்டு குடியரசு தினம், அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் (பவள விழா) நிறைவுபெற்றதைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படப்பட்டு வருகிறது.

அதற்காக, ‘ஸ்வா்ணிம் பாரதம்: விராசத் ஔா் விகாஸ்’ அதாவது ‘தங்க பாரதம்: பாரம்பரியமும் மேம்பாடும்’ என்ற கருப்பொருளில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 16 அலங்கார ஊா்திகள் குடியரசு தின விழா அணிவகுப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த அணிவகுப்பின் முக்கிய அங்கமாக, நாட்டின் ராணுவ பலத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படை வீரா்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  முப்படைகளின் கூட்டுறவை பறைசாற்றும் விதமாக, முதன் முறையாக ‘பலம்வாய்ந்த, பாதுகாப்பான பாரதம்’ என்ற கருப்பொருளில் முப்படைகளின் அலங்கார ஊா்திகள் அணிவகுப்பில் இடம் பெற்றது. குடியரசு தின விழா சிறப்பு நிகழ்வாக, இந்தோனேசிய ராணுவ வீரா்கள் மற்றும் இசைக் குழுவும் அணிவகுப்பில் இடம்பெற்றது. மேலும் டி.ஆர்.டி.ஓ. சாா்பில் ‘பன்முனைத் தாக்குதல்களுக்கு எதிரான பல அடுக்கு பாதுகாப்பு’ என்ற கருப்பொருளில் தனி அலங்கார ஊா்தி அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து