Idhayam Matrimony

குடியரசு தின விழா: கடமைப் பாதையில் குப்பைகளை அகற்றிய பிரதமர் நரேந்திர மோடி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2025      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடெல்லி : குடியரசு தின விழாவின்போது கடமைப் பாதையில் கிடந்த குப்பையை பிரதமர் மோடி அகற்றினார்.

நாட்டின் 76-வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.   76-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். பின்னர் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை (கடமை பாதை) பகுதியில் நடைபெற்றது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவா பங்கேற்றார்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை வரவேற்பதற்காக சென்றார். அப்போது கடமைப் பாதையில் குப்பை பொருள் கிடப்பதை கண்ட பிரதமர் மோடி, உடனடியாக அந்த குப்பையை எடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'தூய்மை இந்தியா' திட்டம் குறித்து நாட்டு மக்களிடம் தொடர்ச்சியாக பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், குடியரசு தின விழாவில் அவராகவே முன்வந்து குப்பையை அகற்றியது 'தூய்மை இந்தியா' திட்டத்தின் முக்கியத்துவத்தை நாட்டு மக்களிடம் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து