Idhayam Matrimony

சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் சரியானதை மோடி செய்வார்: ட்ரம்ப்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      உலகம்
Trump-Modi-2024-10-10

Source: provided

வாஷிங்டன்: சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் சரியானதை மோடி செய்வார், நாங்கள் விவாதித்து வருகிறோம் என்று ட்ரம்ப் கூறினார்.

சட்டவிரோத குடியேற்ற விவகாரம் தொடர்பாக மோடியுடன் விவாதித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் அமெரிக்கா வர வாய்ப்புள்ளது என தெரிவித்த அவர், ‘இந்தியாவுடன் தங்களுக்கு நல்ல உறவு உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து ஆண்ட்ரூஸுக்குத் திரும்பும் வழியில் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம்  (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “ நேற்று (திங்கட்கிழமை) காலை பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது.” என்று ட்ரம்ப் தெரிவித்தார். சட்டவிரோதமாக குடியேறி இருப்பவர்களை அழைத்துச் செல்ல மோடி ஒப்புக்கொண்டாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், “அவர் (மோடி) சரியானதைச் செய்வார். நாங்கள் விவாதித்து வருகிறோம்.” என்று கூறினார்.

பிரதமர் மோடி உடனான தொலைபேசி உரையாடலின் விவரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “(மோடியுடனான தொலைபேசி உரையாடலில்) அனைத்தும் வந்தது” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து