Idhayam Matrimony

முல்லைப்பெரியாறு அணை குறித்த அச்ச உணர்வு காமிக்ஸ் கதைகளில் வருவதை போல் உள்ளது- சுப்ரீம் கோர்ட்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      இந்தியா
Mullai-River 2023-08-17

Source: provided

புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கை வேறு அமர்வு விசாரித்து வருவதாகவும், இந்த வழக்கையும் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வுக்கே பரிந்துரைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவதோடு, லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோகும் என்றும், எனவே அணையை ஆய்வு செய்து போதிய திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, நானும் கேரளாவில் வசித்துள்ளேன். நமது வயதை விட இருமடங்கு வயதிலும் முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது. 130 ஆண்டுகளுக்கும் மேல் பாதுகாப்பாக நின்று கொண்டிருக்கிறது. பல பருவ மழையை கண்டும் முல்லைப்பெரியாறு அணை இன்றும் உறுதியாக உள்ளதை நம்மால் காண முடிகிறது. அணையை கட்டிய பொறியாளர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

அணை விவகாரத்தில் அச்ச உணர்வு என்பது அடுத்து என்ன நடக்கும் என்ற காமிக்ஸ் கதைகளை போல் உள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்குடன் இந்த வழக்கையும் இணைத்து விசாரிக்க பட்டியலிடுமாறு சுப்ரீம் கோர்ட் பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து