Idhayam Matrimony

மாஞ்சோலை மக்களை சந்திக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      தமிழகம்
CM-2 2024 07 23

Source: provided

சென்னை : நெல்லை மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக  முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் கள ஆய்வு செய்வதற்காக மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார் இந்த சுற்றுப்பயணத்தில் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில் கடந்தாண்டு இறுதியில் ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டார். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள இருந்த நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழலில் நேற்றும், நேற்று முன்தினமும் விழுப்புரத்தில் கள ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மறைந்த ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கத்தையும், இட ஒதுக்கீடு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த 21 சமூக போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தையும் திறந்து வைத்து  சென்னை திரும்பினார்.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக (பிப்ரவரி 6,7ம் தேதி) முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு கள ஆய்வின்போது மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களையும் முதல்வர் சந்தித்து பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை நீர்வளத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து