Idhayam Matrimony

அனைத்து வடிவிலான போட்டி: 2024-ம் ஆண்டின் ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை வென்றார் பும்ரா

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      விளையாட்டு
Bumrah-2024-02-29

Source: provided

துபாய் : அனைத்து வடிவிலான போட்டிகளில் கடந்த ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார்.

துல்லியத்தன்மை...

இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டு அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது திறமை, பந்துவீச்சில் துல்லியத்தன்மை, தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் திறன் ஆகியவை அவருக்கு ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை பெற்றுத் தந்துள்ளது. இது குறித்து ஐசிசி தரப்பில் தெரிவித்ததாவது: இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கடந்த ஆண்டு முழுவதும் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டமைக்காக மிகவும் மதிப்புமிக்க சர் கர்ஃபீல்டு சோபர்ஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5-வது இந்திய வீரர்...

31 வயதாகும் ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதினையும் வென்றுள்ளார். அதேபோல, ஐசிசியின் கடந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியிலும் பும்ரா இடம்பிடித்துள்ளார். ஐசிசியின் சிறந்த வீரருக்கான சர் கர்ஃபீல்டு சோபர்ஸ் விருதினை வெல்லும் 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். அவருக்கு முன்பாக, ராகுல் டிராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010), ரவிச்சந்திரன் அஸ்வின் (2016) மற்றும் விராட் கோலி (2017, 2018) போன்ற இந்திய வீரர்கள் இந்த விருதினை வென்றுள்ளனர்.

900 புள்ளிகளை...

ஜஸ்பிரித் பும்ராவின் சிறப்பான செயல்பாடுகள் ஐசிசியின் டெஸ்ட் பந்துவீச்சு தவரிசை புள்ளிகளில் பிரதிபலித்தது. டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சு தரவரிசையில் பும்ரா 900 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் 900 புள்ளிகளைக் கடந்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவரையேச் சேரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து