Idhayam Matrimony

சென்னை, தர்மபுரி உள்ளிட்ட த.வெ.க.வின் 2வது கட்ட மா.செ.,க்கள் நியமனம்

புதன்கிழமை, 29 ஜனவரி 2025      தமிழகம்
Vijay 2024-09-09

Source: provided

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியானது.

2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, அரசியல் பணிகளில் த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். பிப்.,2ம் தேதி கட்சி தொடங்கி முதலாமாண்டை நிறைவு செய்ய உள்ள நிலையில், அதற்கு முன்பாக மாவட்டம் மற்றும் மாநில அளவில் நிரப்பப்படாத பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமிப்பதில் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார்.

அதன்படி, த.வெ.க., மாவட்ட செயலர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கடந்த 24ம் தேதி சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அப்போது, நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரித்து நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக, 19 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், 2வது கட்ட மாவட்ட செயலாளர்களை நியமிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் பனையூரில் நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, சென்னை, செங்கல்பட்டு, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். சென்னை புறநகர் - சரவணன், தென்சென்னை - தாமு, சென்னை கிழக்கு - பாலமுருகன்,  புதுக்கோட்டை - பர்வேஸ், கன்னியாகுமரி மத்திய மாவட்டம் - கிருஷ்ணகுமார், கன்னியாகுமரி கிழக்கு - மாதவன், மதுரை மேற்கு - தங்கபாண்டி, நாகை - சுகுமார், தர்மபுரி மேற்கு - சிவா, கள்ளக்குறிச்சி மேற்கு - பிரகாஷ், நாமக்கல் கிழக்கு - செந்தில்நாதன்,  மயிலாடுதுறை - கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, 'மாவட்ட அளவிலான நிர்வாகிகளை நியமிக்கும் போது கட்சியின் கட்டமைப்புக்கு வலுசேர்க்கும் சிறந்த தொண்டர்களுக்கு, நிர்வாக பொறுப்புகளை வழங்க வேண்டும். நிர்வாக பொறுப்புகளை வழங்குவதில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது,' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து