Idhayam Matrimony

இஸ்ரேல் பிரதமரை டிரம்ப் அடுத்த வாரம் சந்திக்கிறார்

புதன்கிழமை, 29 ஜனவரி 2025      விளையாட்டு
Trump 2024-11-06

Source: provided

அமெரிக்கா : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுத் தலைவரை சந்திக்கவுள்ளார். காஸாவில் 15 மாதங்கள் நீடித்து வந்த போர் தற்போது நிறுத்தப்பட்டு இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று வருகின்றன. இந்த போர் நிறுத்தத்தைத் தொடர இஸ்ரேல் மற்றும் ஹமாஸை அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்தும் வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில் வருகிற 4-ம் தேதி வெள்ளை மாளிகையில் இருவரின் சந்திப்பும் நடைபெறவுள்ளது. 2-வது முறையாக பதவியேற்றுள்ள டிரம்ப் அழைப்பு விடுத்துள்ள முதல் வெளிநாட்டுத் தலைவர் நெதன்யாகு ஆவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதம் வழங்கவும், ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கவும் நெதன்யாகு கோரிக்கை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.f

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து