Idhayam Matrimony

தைப்பூச விழாவை முன்னிட்டு பழனி கோவிலுக்கு மாட்டு வண்டிகளில் வந்த பக்தர்கள்

புதன்கிழமை, 29 ஜனவரி 2025      தமிழகம்
Palani 2023-08-21

Source: provided

பழனி : தைப்பூச விழாவை முன்னிட்டு மாட்டு வண்டியில் வந்த முருக பக்தர்கள்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டி பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து தரிசனம் செய்தனர். இக்கோவிலில் வருகிற  11-ம் தேதி தைப்பூசத்திருவிழா நடக்கிறது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி வருகின்றனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், மாட்டு வண்டிகளில் வந்தனர். 

இவர்கள் நுாறு ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறையில் மாட்டு வண்டிகளில் வருகின்றனர். இந்தாண்டு, 20-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் வந்தனர். மாட்டு வண்டிகளுடன் ஆட்டோ, சைக்கிள், டூவீலர், கார்களிலும் பக்தர்கள் வந்தனர். காவடிகள் எடுத்து, அலகு குத்தி அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

கடந்த 2024-ல் கிரிவீதியில் மாட்டு வண்டிகளுக்கு அனுமதி இருந்தது. இந்தாண்டு அனுமதி இல்லாததால் தனியார் வாகன நிறுத்தங்களில் மாட்டு வண்டிகளை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு மாட்டு வண்டிக்கு, 400 ரூபாய் வீதம் தனியார் கட்டணம் வசூலித்தனர். இதை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து