எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கால்நடைகள், செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று (ஜன. 30) ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 96 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. அதில், சென்னையில் கால்நடை மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வரும் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்த வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் மாட்டுக் கொட்டகைகள் திறக்கப்படவுள்ளது. முதல் கட்டமாக பேசின்பாலம் சாலையில் 100 மாடுகள் தங்க வைக்கும் அளவிற்கு 7.700 சதுர அடி பரப்பளவில் நவீன கொட்டகை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
வளர்ப்பு நாய்களுக்கு வயதாகிவிட்டாலோ அல்லது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டாலோ அவற்றை தெருவில் விட்டு விடுகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி, அதன் முழு விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து கண்காணிக்க முடியும். மேலும், வளர்ப்பு நாய்கள் தெருவில் சுற்றிக் கொண்டிருந்தால், அதை மைக்ரோசிப் உதவியுடன் கண்டறிந்து உரிமையாளரிடம் வழங்க முடியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


