Idhayam Matrimony

கெஜ்ரிவால் மீது நம்பிக்கை இல்லை: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 7 எம்.எல்.ஏ.,க்கள் விலகல்

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2025      இந்தியா
AAP 2024-10-08

Source: provided

புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மியிலிருந்து 7 எம்.எல்.ஏ.க்கள் விலகினர்.

டில்லியில் வரும் பிப்.5 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. பிப்.8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் இன்று டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 7 எம்.எல்.ஏ.,க்கள் விலகியது. டில்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.டில்லி சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான நேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரும் அடியாக பார்க்கப்படுகிறது. 

இது குறித்து ஆம் ஆத்மி பாலம் எம்.எல்.ஏ., பாவனா கவுர், கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உங்கள் மீதும், கட்சியின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டதால், ஆம் ஆத்மி கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்கிறேன். தயவுசெய்து அதை ஏற்றுக்கொள்ளுங்கள். நான், திரிலோக்புரி எம்.எல்.ஏ., ரோஹித் மெஹ்ரௌலியா, ஜனக்புரி எம்.எல்.ஏ., ராஜேஷ் ரிஷி, கஸ்தூர்பா நகர் எம்.எல்.ஏ., மதன் லால், மெஹ்ரௌலி எம்.எல்.ஏ., நரேஷ் யாதவ்,ஆதர்ஷ் நகரைச் சேர்ந்த பவன் சர்மா மற்றும் பிஜ்வாசனைச் சேர்ந்த பி.எஸ். ஜூன் ஆகிய ஏழு எம்.எல்.ஏ.,க்கள் இன்று கட்சியிலிருந்து முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறோம். இவ்வாறு பாவனா கவுர் கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 2025 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி டிக்கெட் வழங்காதவர்கள். இந்த அனைத்து தொகுதிகளிலிருந்தும் கட்சி புதிய முகங்களை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த 7 பேரும் கட்சியிலிருந்து விலகி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து