எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக உள்துறை செயலாளர், கண்டிப்பாக ஆஜராக வேண்டும்; இல்லையெனில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும்' என்று கோர்ட் கண்டிப்பை தொடர்ந்து, நேற்று மாலை உள்துறை செயலாளர் தீரஜ்குமார் ஐகோர்ட்டில் ஆஜரானார்.
சென்னை ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் நடந்த வழக்கு விசாரணையின்போது, 'கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவுகளை போலீசார் செயல்படுத்துவதில்லை' என்று கேள்வி எழுப்பிய நீதிபதி வேல்முருகன், 'இது தொடர்பான விசாரணைக்காக இன்று (நேற்று) நேரில் ஆஜராக வேண்டும்' என்று உள்துறை செயலாளர் தீரஜ் குமாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், நேற்று காலை அரசு தரப்பில் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி, நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, 'மாலை 4.30 மணிக்குள் தமிழக உள்துறை செயலாளர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும். இல்லையெனில், சுப்ரீம் கோர்ட்டில் அவர் தடை உத்தரவை பெற வேண்டும். இவை இரண்டையும் செய்யவில்லை எனில் அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும்' என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவை தொடர்ந்து நேற்று மாலை உள்துறை செயலாளர் தீரஜ்குமார் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது நீதிபதி, 'உள்துறை செயலாளரை நேரில் வரவழைப்பது நோக்கமல்ல; போலீஸ் துறையில் நடப்பதை தெரியப்படுத்தவே நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது,' என்றார். நிலுவை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியை விரைவுபடுத்தும்படி போலீசாருக்கு அறிவுறுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


